Nehodí se? Vůbec nevadí! Zboží můžete vrátit až do 30 dní
S dárkovým poukazem nešlápnete vedle. Obdarovaný si za dárkový poukaz může vybrat cokoliv z naší nabídky.
Až 30 dní na vrácení zboží
இந்தப் புத்தகம் - நான் முரசொலியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு
கழக உடன்பிறப்புகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க
உடன்பிறப்புகளுக்கும் பல உண்மைகளை எடுத்து விளக்கும் என நம்புகிறேன் !
இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நான் சொன்னது உண்மை என்பதை நாடு உணர்ந்து கொள்ளும்.
எனக்கும் என் இனிய நண்பர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள ஆழமான நட்புக்கு இந்தக் கடித நூல்- "இதய ஒலி"ஒரு அடையாளச் சின்னம்!
என் இனிய நண்பரே!
உங்களுக்காக - உங்கள் உடல் நலிவு நீங்குவதற் காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் வேண்டுகோள் செய்தி விடுத்துள்ளார்!
பல்வேறு தெய்வங்களின்பால் பக்தி கொண்டோர் நீங்கள் நலம் பெற்று எழ பிரார்த்தனை நடத்துகிறார்கள்!
உங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ள கட்சித் தோழர்கள்-முன்னணியினர்-ஆலயங்கள் பல சென்று உங்களை மீண்டும் நலமுடன் காண வேண்டுமென பிரார்த்தனை நடத்துகிறார்கள்!
பிள்ளைப்பிராய முதலே அந்த நம்பிக்கையில்லாமல் பெரியார் வழியில் அண்ணா வழியில் வளர்ந்துவிட்டவன் நான்! அதனால் நான் உங்களுக்காக தெய்வங்களிடம் கையேந்தி வரம் கேட்டுப் பயனில்லை என்று கருதுகிறவன்! அது என் கொள்கை!
Ahoj! Jsem Libroamiko, tvůj knižní rádce.
Jak ti můžu pomoct?